Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

SSLC - மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர் கவனத்திற்கு

SSLC - மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர் கவனத்திற்கு
VI.உதவித் தேர்வாளரின் பணிகள்

1. மதிப்பீட்டு பணிக்கு காலை சரியாக 8.30 மணிக்கு மைய மதிப்பீட்டு முகாமிற்கு வருகை புரிதல் வேண்டும்.

2. முதன்மைத் தேர்வாளரின் எண்ணைத் தெரிந்துகொண்டு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்குச் செல்லவேண்டும்.

3. முதன்மைத் தேர்வாளரிடம் தங்களது விடுவிப்பு ஆணையை ஒப்படைத்து விடைத்தாள் உறையை பெற்றுக் கொண்டு பகிர்மானப் பதிவேட்டில் பதிய வேண்டும்.

4. உதவித் தேர்வாளர்கள் சிவப்பு நிற மை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

5. உதவித் தேர்வாளர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட உறையில் சரியான எண்ணிக்கையில் விடைத்தாள்கள் உள்ளதா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். உறையின் முகப்பில் தனது உதவித் தேர்வாளர் எண், தேதி, பிரிவேளை(மு/பி.ய) எனக் குறிப்பிட்டு கையொப்பமிட வேண்டும்.

6. உதவித் தேர்வாளர் விடைத்தாட்கள் உறைகளைப் பெற்றவுடன், மதிப்பீட்டு பணி மேற்கொள்ளும் முன்னர் விடைத்தாட்களின் எண்ணிக்கைச் சரியாக உள்ளதா என்பதனையும், விடைத்தாட்கள் ஒவ்வொன்றிலும் அனைத்து பக்கங்களும் உள்ளனவா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் குறைகள் இருப்பின் முதன்மைத் தேர்வாளரின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். ஒவ்வொரு விடைத்தாளிலும் படிவம் -7 ன்படி அனைத்துப் பக்கங்களும் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.

7. விடைத்தாளில் வலது மேல் ஓரத்தில் உதவித் தேர்வாளர் தனது தேர்வாளர் எண், தேதி. பிரிவுவேளை(மு.ப/பி) முதலியவற்றை குறிப்பிட்டு கையொப்பமிடவேண்டும்.

8. உதவித்தேர்வாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உறையின் மேல்புறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கட்டு எண் மற்றும் உறை எண் (Bundle Number Cover Number) ஆகியவற்றை ஒவ்வொரு விடைத்தாளிலும் முகப்புச் சீட்டில் Part-B மற்றும் Part - C பகுதியில் அவற்றிற்கான இடத்திலும் மற்றும் விடைத்தாளின் இடது மேல் ஓரத்திலும் எவ்வித தவறும் இன்றி எழுதவேண்டும். மேலும் விடைத்தாள் எண் (Script Number) என்ற கலத்தில் 01 முதல் பாடத்திற்கு ஏற்ப 15 எண்கள் வரை Part -B மற்றும் Part-C பகுதிகளிலும் விடைத்தாளின் இடது மேல் ஓரத்திலும் எழுத வேண்டும். (உறைகளில் உள்ள விடைத்தாள்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு Script Number உதவித்தேர்வாளர்கள் தான் இடவேண்டும்).






Post a Comment

0 Comments