Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking - அடுத்த ஆண்டு முதல் 10 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 பொது தேர்வு-அமைச்சர் அறிவிப்பு

Breaking - அடுத்த ஆண்டு முதல் 10 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 பொது தேர்வு-அமைச்சர் அறிவிப்பு!
ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் அறிவித்துள்ள முக்கிய செய்தி-  10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டிற்கு இரண்டு முறை பொது தேர்வு நடத்தும் திட்டம் 2025- 2026 ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

CBSE மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் எனவும் ,மாணவர்கள் விருப்பப்படி ஒரு முறை அல்லது இரண்டு முறையும் தேர்வை எழுதி கொள்ளலாம் எனவும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

மாணவர்களின் செயல் திறன் எந்த தேர்வில் சிறப்பாக உள்ளதோ அதன் மதிப்பெண்கள் கணக்கீடு எடுத்துக் கொள்ளப்படும் யாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் தேர்வு குறித்த மாணவர்களின் பதட்டத்தை தணிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசின் இந்த திட்டத்தில் அனைவரும் இரண்டு முறை தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயம் இல்லை எனவும்,இரண்டு முறை எழுதினாலும் அதில் எதில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளார்களோ அதுதான் கணக்கில் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments