Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள், மார்ச் -2024-தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல்

மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள், மார்ச் -2024-தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் 
நடைபெறவுள்ள மார்ச் - 2024, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வெழுத, விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை 19.02.2024 அன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் "HALL TICKET” என்ற வாசகத்தினை 'Click' செய்தால் தோன்றும் பக்கத்தில் 2नांना "HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR- MARCH-2024 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD" என்ற வாசகத்தினை 'Click' செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth), பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேல்நிலை முதலாமாண்டு (+1 Arrear) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வெழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து, ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும்.

மார்ச் - 2024, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான தேர்வு கால அட்டவணை TIME TABLE) www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments