TRANSPORT NEWS: போக்குவரத்து மாற்றம்-உங்கள் ஏரியாவா? செக் பண்ணிக்கோங்க!
மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் 02.01.2024 அன்று திருச்சிக்கு வருகை தருவதை முன்னிட்டு கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
01.01.2024 இரவு 20.00 மணி முதல் விமான நிலையம் வழியாக புதுக்கோட்டை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் ஜி-கார்னர், டி.வி.எஸ்.டோல்கேட் மேம்பாலம், மன்னார்புரம் மேம்பாலம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, விராலிமலை வழியாக புதுக்கோட்டை செல்லவேண்டும்.
பேருந்துகள்
02.01.2024 காலை 07.00 மணி முதல் சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் அனைத்துப் பேருந்துகளும் டி.வி.எஸ்.டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, விராலிமலை வழியாக புதுக்கோட்டை செல்லவேண்டும்.
திருச்சி விமான நிலையத்திற்கு செல்லும் கட்சியினரின் வாகனங்கள்
மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை வரவேற்க விமான நிலையத்திற்கு வருகை தரும் கட்சித் தொண்டர்களின் வாகனங்கள் 02.01.2024 காலை 09.00 மணி வரை மட்டுமே புதுக்கோட்டை சாலையில் செல்ல அனுமதிக்கப்படும்.
குண்டூர், மாத்தூர், பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் கட்சியினரின் வாகனங்கள்
டி.வி.எஸ்.டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, புதிய சுற்றுச்சாலை, கும்பக்குடி வழியாக செல்லவேண்டும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்