இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ளார்.₹19,850 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதனை தொடர்ந்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களிடம் வைத்த கோரிக்கைகள்:
1.மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று ஏற்கனவே வைக்கப்பட்ட கோரிக்கையை பிரதமர் பரிசீலிக்க வேண்டும்.
2.சென்னை - பினாங்கு, சென்னை - டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை முன்னுரிமை அடிப்படையில் தொடங்க வேண்டும்.
3.சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு ‘பங்குப் பகிர்வு மாதிரி' அடிப்படையில் ஒன்றிய அரசின் பங்களிப்பை விரைந்து வழங்க வேண்டும்.
4.இருவழிச்சாலையாக மேம்படுத்தப்படும் நெடுஞ்சாலைகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதில் விலக்கு அளிக்க வேண்டும்.
5.சென்னை, தென்மாவட்ட வெள்ளப் பாதிப்பை கடும் இயற்கைப் பேரிடர்களாக அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உரிய நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும்.
மேலும்,தமிழ்நாடு வெள்ள பாதிப்பை கடுமையான இயற்கை பேரிடராக அறிவித்து நிதியை வழங்க வேண்டும். தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உரிய நிவாரண நிதியை வழங்க வேண்டும் என திருச்சி விமான நிலைய புதிய முனைய திறப்பு விழாவில் பிரதமர் முன்னிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்