Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking:ரேஷன் அட்டைதாரர்களுக்கு - குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி- இந்த மாதமே 1000 ரூபாய்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- இந்த மாதமே 1000 ரூபாய்!

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு செய்த நபர்களுக்கு இந்த மாதமே வங்கி கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வினை வளப்படுத்திடும் பொருட்டும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15.09.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து செயல்படுத்தி வரும் அரிய திட்டங்களினாலும், செயல்பாடுகளினாலும் தமிழகம் அனைத்துத் துறைகளில் இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. 

இத்திட்டத்தில் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 1,06,50,000 மகளிர் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கான தொகை அவர்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு இம்மாதம் முதலே வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பெறுவதற்காக மேல்முறையீடு செய்தவர்களுக்கு தகுதி உள்ளவர்களுக்கு இந்த மாதம் 15 ஆம் தேதிக்கு முன்பாகவே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Post a Comment

0 Comments