Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Bank Loan Camp - Self Employed Aspirants: சுயதொழில் தொடங்க ஆர்வலர்களுக்கு வங்கிக் கடன் முகாம்!

Bank Loan Camp - Self Employed Aspirants: சுயதொழில் தொடங்க ஆர்வலர்களுக்கு வங்கிக் கடன் முகாம்!


ஜனவரி 05 சென்னை மாவட்டத்தில் உள்ள மண்டலங்களில் வருகின்ற 05.01.2024 முதல் 27.01.2024 வரை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது. சுய தொழில் தொடங்க விரும்புவோருக்கு, வங்கி கடன் பெற இம்முகாம்களில் பதிவு செய்து கொள்வதன் மூலம் விரைவில் பயன் பெறலாம்.

சென்னை மாவட்டத்தில் சுய வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், மண்டல இணை இயக்குநர் அலுவலகம் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுதிட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமமந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்குதல் திட்டம், பிரதம மந்திரியின் உணவுபதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.

 ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த இளையோரும், பொதுமக்களும், புகைப்படம், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, விலைப் பட்டியல் மற்றும் திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் வருகை தந்து மண்டல இணை இயக்குநர் அலுவலர்கள் மூலமாக இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கடன் திட்ட விண்ணப்பம் உடனடியாக வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டு கடன் பெற்று தொழில் நிறுவனம் தொடங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற 05.01.2024 முதல் 27.01.2024 வரை சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் கலந்து கொண்டு, தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments