TNPSC தேர்வுகள் ஒத்திவைப்பு
தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வும் ஒத்தி வைப்பதாக TNPSC தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், அறிவிக்கை எண் 34/2022 ல் அறிவித்தபடி கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான, நேர்முகத் தேர்வினை கடந்த 22.11.2023 முதல் நடத்தி வருகிறது. நேர்முகத் தேர்வுக்கான எஞ்சிய இரண்டு நாட்கள் (04.12.2023 முப & பிப மற்றும் 06.12
.2023 முப) உள்ள நிலையில், தமிழக அரசு, மிக்ஜம் (MICHAUNG) புயல் காரணமாக வருகிற திங்கட்கிழமையினை (04.12.2023) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு, பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வு நாளில் கீழ்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன..
வரும் திங்கள் கிழமை (04.12.2023) பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திங்கட்கிழமை (04.12.2023) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வு வரும் 06.12.2023 புதன் கிழமைக்கும், புதன் கிழமை (06.12.2023) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வு வரும் வியாழக்கிழமை (07.12.2023) அன்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
எனவே திங்கட்கிழமை (04.12,2023) அன்று நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் அனைவரும் வரும் புதன் கிழமை (06.12.2023), அன்று மாற்றியமைக்கப்பட்டுள்ள நேர்முகத்தேர்விலும் புதன் கிழமை (06.12.2023) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் அனைவரும் வியாழக்கிழமை (07.12.2023) அன்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ள நாளில் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்