ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம்
தருமபுரி மாவட்டம்
அலுவலக உதவியாளர் / இரவு காவலர் பதவிக்கான அறிவிக்கை (Notification)
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், ஒன்றிய தரப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் / இரவு காவலர் பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 03.01.2024முதல் 11.01.2024 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலையின் பெயர்:
அலுவலக உதவியாளர் - 1
இரவு காவலர் - 1
சம்பளம்:
50000-15700 ரூபாய் (Level 1) என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்.
மொத்த காலி பணியிடங்கள்: 02
கல்வி தகுதி:
அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி வேண்டும். பெற்றிக்க மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
இரவு காவலர்: பணியிடத்திற்கு எழுத
படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
கடைசி தேதி:11.01.2024 பிற்பகல் 5.30 மணி வரை
நிபந்தனைகள்:
1. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை www.dharmapuri.tn.nic.in இனைய தளத்திலும் தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதளத்திலும் National Career Service Portal) www.ncs.gov.in உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும்.
2. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 03.01.2024 முதல் 11.01.2024 2 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம் பாலக்கோடு என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
3. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத (கல்வி, வயது, இனசுழற்சி) விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
4. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம் மற்றும்
தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும்.
5. தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
6. காலதாமதமாக வரும் விண்ணப்பங்ள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
7. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்