நெல்லைச் சீமையின் பெருமையாய் விளங்கும் படைப்பாளிகளைப் போற்றி, இந்நிலப்பரப்பின் எழுத்து. கலைகள், சிற்பம், ஓவியம், சுவடிகள், கலைப் பொருட்கள், இயற்கை சூழலியல் சிறப்புகள், பண்பாடு என அனைத்தையும் அனைத்து மக்களுடனும் இணைந்து கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் வரும் ஜனவரி மாதத்தில் "பொருநை நெல்லை திருவிழா 2024" நம் திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் நடத்தப்பட உள்ளது. இதில் இலக்கியத் திருவிழா, இளைஞர் இலக்கியத் திருவிழா, கலைத் திருவிழா, புத்தகத் திருவிழா ஆகியவை நடைபெற உள்ளன.
தலைச்சிறந்த படைப்பாளிகளும், படைப்புகளைப் போற்றும் வாசகர்களும் பெருமளவில் பங்கேற்கவுள்ள பெருமைமிகு விழாவாக பொருநை நெல்லை திருவிழா அமையவுள்ளது. இச்சிறப்பான விழாவில் ஆர்வம் மிக்க அனைவரும் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாக பின்வரும் போட்டிகள் மூலம் சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.
அனைத்துப் போட்டிகளும் பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பொதுப் பிரிவு என இரு பிரிவுகளில் தமிழில் நடைபெறும். பொதுப்பிரிவில் பங்கேற்க வயது வரம்பு ஏதும் இல்லை. அனைவரும் பங்கேற்கலாம். பள்ளி மாணவ மாணவியர் பிரிவில் பங்கேற்போர் தங்கள் படைப்புகளை பள்ளியின் பெயர், முகவரி விவரங்களுடன் அனுப்பிட வேண்டும்.
பேச்சுப்போட்டி, வினாடி வினா போட்டி ஆகியவற்றில் பங்கேற்க விரும்புவோர், 14.12.2023 முதல் 28.12.2023 மாலை 4 மணிக்குள் www.tirunelveli.nic.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். போட்டி தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
பிறபோட்டிகளில் பங்குபெற விரும்புவோர். தங்கள் படைப்புகளை 28.12.2023 மாலை 4 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள "வணக்கம் நெல்லை" கட்டுப்பாட்டு அறையில் நேரடியாகவோ, "பொருநை நெல்லை திருவிழா 2024", வணக்கம் நெல்லை கட்டுப்பாட்டு அறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் 627009 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ, porunainellai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம். படைப்புகளை அனுப்பும் அனைவரும்
தங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை தெளிவாக இணைத்து அனுப்பிட வேண்டும்.
இப்போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு தமிழகத்தின் தலைச்சிறந்த படைப்பாளிகள் திருக்கரங்களால் பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்படும். படைப்புகள் பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் காட்சிப்படுத்தப்படும். மின்புத்தகமாகவும் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்