Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

சேலம் மாவட்டத்தில் தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் வருகின்ற 11.12.2023 அன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:



சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்நிறுவனங்களில் காலியாக உள்ள தொழிற்பழகுநர் இடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு 11.12.2023 அன்று காலை 10.00 மணியளவில் சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் ஐ.டி.ஐ முடித்த மாணவர்கள் தங்களுக்கு உரிய தொழிற்பழகுநர் இடங்களைத் தேர்வு செய்து உதவித்தொகையுடன் தொழிற்பழகுநர் பயிற்சி பெற அழைக்கப்படுகிறார்கள். இப்பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் ஒன்றிய அரசால் வழங்கப்படுகின்றது.

எனவே ஐ.டி.ஐ பயிற்சி முடித்து தொழிற்பழகுநர் பயிற்சி முடிக்காதவர்கள் அனைவரும் தங்களது அனைத்து உண்மை சான்றிதழ்கள் மற்றும் நகல் சுய விவரத்துடன் (பயோடேட்டாவுடன்) தொழிற்பழகுநர் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ. கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments