பார்வையில் கண்டுள்ள இவ்வியக்கக செயல்முறைகளின் மீது அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. அதில் கற்பித்தலில் புதுமையைப் புகுத்தியும் மற்றும் தொழில்நுட்பத் திறனைப் பயன்படுத்தி கற்பித்தலைச் செய்யும் ஆசிரியர்களை கண்டறிந்து, அவர்களின் கல்வித்திறன் மற்றும் கற்பித்தல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கனவு ஆசிரியர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் பட்டியல் பார்வையில் கண்டுள்ள செயல்முறைகளின்படி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவானது நாமக்கல் மாவட்டத்தில் கீழ்க்கண்ட விவரப்படி நடைபெற உள்ளது.
பாராட்டு விழா நடைபெறும் நாள்:19.12.2023
நேரம்:09.00காலை
இடம்: விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியின் கலையரங்கம், எளையாம்பாளையம், நாமக்கல் மாவட்டம்.
மேற்படி விழாவில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுடன் அவரின் கணவர் / மனைவி மற்றும் குழந்தைகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். (அதிகபட்சம் விருது பெறும் ஆசிரியருடன் கணவர் / மனைவி மற்றும் குழந்தைகள் என மொத்தம் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்) இதன் விபரத்தினை தங்கள்மாவட்டத்தில் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியருக்கு தெரிவித்தும், அவரை 18.12.2023 அன்றே அலுவலக. பணியாக கருதி (ON-DUTY) விடுவித்து அனுப்பி வைக்க, சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. அனைவரும் 18.12.2023 மாலை அன்றே தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள விடுதிகளுக்கு வந்துசேர அறிவுறுத்தப்படுகிறது.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்