Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

1ஆம் முதல் 5ஆம் வரை மாணவர்களுக்கு இரண்டாம் பருவ தேர்வு

2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தேர்வு நடத்துதல் சார்ந்த அறிவுரைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல் -தொடர்பாக.

2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தேர்வு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.





1 முதல் 5-ஆம் வகுப்பு தேர்விற்கான வினாத்தாட்கள் PDF வடிவில் https://exam.tnschools.gov.in என்ற இனைய முகவரியில்  பதிவிறக்கம் செய்யத்தக்க வகையில் வழங்கப்படும். இணைப்பிலுள்ள வழிகாட்டு நெறிமுறையின்படி வினாத்தாளினை பதிவிறக்கம் செய்து கீழ்காணும் அட்டவணையின்படி நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.

1 முதல் 5-ஆம் வகுப்பிற்கு பதிவிறக்கம் செய்த வினாத்தாட்களில் அப்பள்ளியின் Udise code water mark வினாத்தாளில் தெரியும். அவ்வாறு பதிவிறக்கம் செய்த வினாத்தாட்களை ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களின் தற்போதைய கற்றல் நிலைக்கேற்ப போதிய அளவில் நகல் எடுத்துக் கொள்ள வேண்டும். 

எடுத்துக்காட்டாக 3ஆம் வகுப்பில் 10 மாணவர்கள் அரும்பு நிலையிலும், 10 மாணவர்கள் மொட்டு நிலையிலும், 10 மாணவர்கள் மலர் நிலையிலும் இருப்பின் தலைமை ஆசிரியர்கள் ஒவ்வொரு நிலைக்கான வினாத்தாட்களை எண்ணிக்கைக்கு ஏற்ப நகல் எடுத்து தங்களது கட்டுப்பாட்டில் மந்தணத் தன்மையுடன் இரும்பு அலமாரியில் வைத்து மிகவும் பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும். 

மேலும், தலைமை ஆசிரியர்கள் வினாத்தாட்களை வேறு பள்ளிகளுக்கோ அல்லது எந்தவொரு whatsapp குழுவிலோ பகிரக்கூடாது. மேலும் 1 முதல் 5-ஆம் வகுப்பிற்கு நடத்தப்படும் தேர்விற்கான விடைத்தாட்களை திருத்தம் செய்து பதிவேட்டில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.



Post a Comment

0 Comments