Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TEACHER - அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர ஆசிரியர் வேலை- 2 பள்ளிகளில் காலியாக உள்ள காலி பணியிடங்கள்-CLICK HERE

TRB - ஆசிரியர் நியமனம் - வெளியான புதிய அறிவிப்பு-CLICK HERE

Ration card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு-CLICK HERE

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்கள் Download செய்ய மீண்டும் வாய்ப்பு -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

TRB -Syllabus for Direct Recruitment of Secondary Grade Teachers and B.T. Assistants -CLICK HERE

TET COMPETITIVE EXAM SYLLABUS - ALL SUBJECTS -ஆசிரியர் தகுதி தேர்வு- நியமன தேர்வு பாடத்திட்டம்-CLICK HERE 

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

TN jobs: தமிழக அரசு வேலை - எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!

நீலகிரி மாவட்ட வருவாய் அலகில் காலியாகவுள்ள 3 ஈப்பு ஓட்டுநர் பணியிங்களை நிரப்ப  விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 



மேற்கண்ட 3 பணியிடங்கள் ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) (முன்னுரிமை பெற்றவர்) (Schedule Caste Arunthathiyar on preferential Basis (Priority), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமை பெற்றவர்) (Most Backwird Classes and Denotified Communites (Priority)) மற்றும் பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர) (முன்னுரிமை பெற்றவர (Backward Classes (Other than Backward Class Muslims) (Priority) எனும் இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோர் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு குறைந்த பட்சம் 08-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக HMV/LMV Licence வைத்திருக்க வேண்டும் மற்றும் ஓட்டுநர் பணியில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும். 01.07.2023 அன்றைய நிலையில் குறைந்தபட்ச 18 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். 

மேலும் 01.07.2023 அன்றைய நிலையில் அதிகபட்சமாக பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) 34 வயதுக்குள்ளும் (முன்னாள் இராணுவத்தினராக இருப்பின் 48 வயதுக்குள்ளும்) மற்றும் ஆதிதிராவிடர் (SC&SCA) மற்றும் பழங்குடியினர் (ST) 37 வயதுக்குள் (முன்னாள் இராணுவத்தினராக இருப்பின் 53 வயதுக்குள்ளும்) இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பதிவு தபால் மூலம் 30.11.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். தாமதமாக பெறப்படும் மனுக்கள் பரிசீலனை செய்யப்படமாட்டாது.

 விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியுடையவர்களை நேர்முகத் தேர்வுக்கு வருமாறு பின்னர் தனியே அழைப்பாணை அனுப்பப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments