Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

BREAKING: TRB இன்று வெளியிட்டுள்ள புதிய செய்தி

22-11-2023 List of Candidates Called for Certificate Verification 


2019-2020 முதல் 2021-2022 ஆம் ஆண்டுகளில் வட்டாரக் கல்வி அலுவலர் 33 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை எண்.1/2023, நாள்.05.06.2023 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் 12.07.2023 வரை தேர்விற்கு Online மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. Online மூலம் விண்ணப்பித்தவர்கள் 42716 பேர் அதனைத் தொடர்ந்து போட்டித் தேர்வு 10.09.2023 அன்று ஒளியீடு மதிப்பெண் கணிப்பான்- OMR (Optical Mark Reader) வழியில் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் OMR (Optical Mark Reader) வழியில் தேர்வு எழுதியோர் 35,403 பேர்.

விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள விரும்பினால் 13.07.2023 முதல் 17.07.2023 வரை திருத்தம் செய்ய ஆரிசரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டன.

வட்டாரக் கல்வி அலுவலருக்கான ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் OMR (Optical Mark Reader) வழியில் நடத்திய போட்டித் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் 09.11.2023 அன்று வெளியிடப்பட்டன

பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சன்றிதழ்கள் ஆவணங்கள்

மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களுக்கு 1:1.25 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. சன்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு அழைப்புப் கடிதம், ஆனறிச் சான்றிதழ் படிவம் மற்றும் சுயவிவரப்படிவம் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய

இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தங்களது அழைப்புப் கடிதம் ஆளறிச் சான்றிதழ் படிவம் மற்றும் சுயவிவரப்படிவம் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. அழைப்புக் கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது எனபணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.






Post a Comment

0 Comments