Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கல்வி கடனுக்கு சிறப்பு முகாம்


லயோலா கல்லூரியில் நாளை கல்விக்கடனுக் கான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது என்று சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அர சும் வங்கிகளும் இணைந்து தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டங்க ளிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் கல்வி கடன் வழங்குவதற்கான முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளது. 

இதை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் நாளை (18.11.2023) லயோலா கல்லூரி யில் மாபெரும் கல்விக்கட னுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் கல்விக்கடன்விண்ணப்பம், அதற்கு தேவையான வருமான சான்றிதழ் விண்ணப்பம் மற்றும் பான் கார்டு ஆகியவை இ-சேவை மையம் மூலம் முகாமிலேயே விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முகா மில் அனைத்து மாணவ, மாணவியரும் பெற்றோரும் கலந்துகொண்டு பயனடைலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Post a Comment

0 Comments