மயிலாடுதுறை மாவட்டத்தில் 2.3 மற்றும் 4ம் ஆண்டில் பயிலும் 758 மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று அடைந்துள்ளார்கள். தற்போது பயன் இவ்வலைதளத்தில் (https://www.pudhumaipenn.tn.gov.in) முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வலை தளத்தில் மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் நேரடியாக விண்ணப்பிக்ககூடாது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 18-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக EMIS NO) மாற்றுசான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தற்போது 2,3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள் முதற் கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவிகள் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் கனரா வங்கி ஆகிய வங்கிகளில் மட்டுமே சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். இணைய தளத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக வங்கி கணக்கு, ஆதார் எண் மற்றும் கைபேசி எண்ணுடன் கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின் சமூக நல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9150056809, 9150056805, 9150056801 மற்றும் 9150056810 எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail.com) என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்