Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து இளைஞர்கள் மற்றும் வேலைநாடுனர்கள் தெரிந்து கொள்வதற்கான விழிப்புணர்வு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பிரச்சார வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் விளம்பரப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா. இ.ஆ.ப. அவர்கள் இன்று (01.11.2023) தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.


முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் தேனி மாவட்ட நிர்வாகம். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்ககம் (மகளிர் திட்டம்) இணைந்து 1000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவுள்ள மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 04.11.2023 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுனர்களை தேர்வு செய்யவுள்ளனர். பல திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு திறன் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புக்கு மனுதாரர்களை தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் கலந்துகொள்ள கல்வித் தகுதி 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் பி.இ. டிப்ளமோ, ஐடிஐ. நர்சிங், பார்மசி, டெய்லரிங், டிரைவர் மற்றும் இதர கல்வித் தகுதிகளுடைய அனைவரும் பங்கேற்க வேண்டும்.

இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலைநாடுனர்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். மேலும், இம்முகாமில் பங்கேற்க உள்ள வேலைநாடுனர்கள் "www.tnprivatejobs.tn.gov.in" என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments