Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Jobs News:ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்


ஆதிதிராவிடர், பழங்குடி யினர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் பணியிடங்கள்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

செங்கல்பட்டு மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறையின் கட் டுப்பாட்டின்கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல தொடக் கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நி லைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் 34 பணியிடம், பட்டதாரி ஆசிரியர் 10 பணியிடம் மற்றும் பட்டதாரி ஆசிரியர் 10 பணியிடம் என மொத்தம் 54 பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நிரப்ப படவுள்ளது.

காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் செங்கல்பட்டு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம்மற்றும் செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments