Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Rain Alert: தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு-எந்தெந்த மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளன. எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்பது பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக:

29.08.2023: District Details 
 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

30.08.2023:District Details 
 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

31.08.2023: District Details 
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் பெய்யவாய்ப்புள்ளது. கனமழை

01.09.2023: District Details 
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Post a Comment

0 Comments