குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு/SSLC அல்லது அதற்கு சமமான கல்வித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு-பொது விண்ணப்பதாரர்கள் 01.07.2023 அன்று 18 வயது நிறைவு பெற்றவராகவும் மற்றும் 26 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வயது உச்சவரம்பு தளர்வு கீழ்க்கண்டவாறு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு 18.08.2023 முதல் 17.19.2023 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி https://www.tnusrb.tn.gov.in ஆகும்.
கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், சென்னை, கிண்டியில் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 25.08.2023 அன்று துவங்கப்பட உள்ளது. மேலும். கண்ணகி நகர் எழில் நகர் தன்னார்வ பயிலும் வட்டம் இலவச பயிற்சி மையத்திலும் 25.08.2023 அன்று துவங்கப்பட உள்ளது.
இம்மையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் வாழும் படித்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்பயிற்சி வகுப்பிற்கு சேர. விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் மேற்குறிப்பிட்ட நாளில் சென்னை - 32. கிண்டி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக கலந்து கொள்ளலாம். இப்பணிகாலியிட தேர்வு தொடர்பான தகுதி மற்றும் இதர விவரங்களுக்கு, https://www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்