அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கிண்டியில் உள்ள Desktop Publishing Operator, Digital Photographer, Food Production (General), Food & Beverage Service Assistant, Smartphone Technician cum App Tester, Industry 4.0 வின் கீழ் New age courses- Advanced Computer Numerical Control Technician (CNC), Basic Design and Virtual verifier, Manufacturing Process Control and Automation, Industrial Robotics & Digital Manufacturing ஆகிய தொழிற் பிரிவுகளில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு தரும் விதமாக 2023 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இத்தொழிற்பயிற்சி மாணவர்கள் நிலையத்தில் சேரவிரும்பும் தகுதியுள்ள 31.08.2023 ஆம் தேதிக்குள் நேரடியாக பயிற்சியில் சேரலாம்.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு அரசால் கட்டணமில்லா பயற்சி, விலையில்லா சீருடை மாதாந்திர உதவித் தொகைரூ.750 மற்றும் விலையில்லா வரைபடக்கருவிகள் என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இப்பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பும் வழங்கப்படும். மேலும் விவரங்கள் அறிய இத்தொழிற்பயிற்சி நிலையத்தின் சேர்க்கை உதவிமையத்தை நேரில் அனுகலாம், தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண். 044 -22501350.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்