Chandrayan 3 landing - live telecast Video:
Chandrayaan 3 விண்கலத்தின் லேண்டர் திட்டமிட்டபடி இன்று மாலை 6.04 மணி அளவில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க உள்ளது.
சந்திராயன் 3 நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) ரூ.615 கோடி செலவில் விண்கலத்தை ISRO வடிவமைத்தது.
LVN-3 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. மேலும் 40 நாள் பயணத்துக்கு பிறகு விண்கலம் தற்போது நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வருகிறது.
இந்நிலையில் சந்திராயன் 3 திட்டமிட்டபடி லேண்டர் இன்று மாலை 6.04 மணி அளவில் நிலவில் தரையிறங்க உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நிலவுக்கு அருகே 25 கி.மீ உயரத்துக்கு லேண்டர் வந்ததும் எதிர்விசையை பயன் படுத்தி அதன் வேகம் குறைக்கப்பட்டு இதன் மூலம் தரை பகுதிக்கும் லேண்டருக்குமான உயரம் படிப்படியாக குறைக்கப்படும்.
மேலும் தரையில் இருந்து 150 மீட்டர் உயரத்துக்கு லேண்டர் கொண்டுவரப்பட்டதும் சில விநாடிகள் அப்படியே அந்தரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு அதில் உள்ள sensor மூலம் தரையிறங்க சரியான இடத்தை தேர்வு செய்யப்படும்.
லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும் மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதிக்கு அருகே மெதுவாக லேண்டெர் தரையிறக்கப்படும்.லேண்டர் 5.45 மணிக்கு தொடங்கி 6.04 மணி வரை தரையிறங்கும் லேண்டர் தரையிறங்கிய 3 மணி நேரத்துக்கு பிறகு அதில் வைக்கப்பட்டுள்ள ரோவர் வாகனம் வெளியே வந்து ஆய்வு மேற்கொள்ளும்.
இந்த நிகழ்வை காண்பதற்கு இந்திய மக்கள் மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சந்திராயன் 3 லேண்டர் இன்றுதரையிறங்கும் நிகழ்வை காண்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நிலவில் லேண்டர் தரையிறங்கிய பின் ரோவர் நிலவின் பரப்பில் ஆய்வு செய்ய உள்ளது.
நிலவின் மேற்பரப்பில் ரோவர் தரை இறங்கி ஊர்ந்து செல்லும் பொழுது நிலவின் மணல் பகுதியில் அசோக சின்னம் பதிவு செய்யப்படவுள்ளது.
ரோபோவில் உள்ள சக்கரத்தில் அசோக சின்னமும் இஸ்ரோவின் லோகோவும் இடம்பெற்றுள்ளது.
1. Chandrayaan-3 Mission Soft-landing LIVE Telecast-CLICK HERE
2. WEBSITE -CLICK HERE
2. Facebook Link -CLICK HERE
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்