Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Tamilnadu Jobs News: தமிழக அரசு வேலை - 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பபட உள்ளது. 



இப்பணியிடத்திற்கு கல்வித்தகுதியாக 8-ஆம் வகுப்பு தேர்ச்சியும். மிதி வண்டி ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும். இப்பணிக்கு காலமுறை ஊதியம் விகிதம் ரூ.15700 58100 (Level - 1) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

வயது வரம்பு குறைந்தபட்சம் 18 ஆகவும் அதிகபட்ச வயது வரம்பு 37 மிகாமல் இருக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்ற விதவைகள். 

முன்னாள் இராணுவத்தினர் மற்றும் உயர்கல்வி தகுதி உடைய விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைக்குட்பட்டு வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

இப்பணி நியமனத்திற்கு தேவையான தகுதிகள், இனசுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப்படிவம் ஆகியவை இம்மாவட்டத்தின் www.Kanniyakumar.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 31.07.2023 மாலை 5 மணிக்குள் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில் - 1 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.


Post a Comment

0 Comments