பள்ளிக் கல்வி இயக்குரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
அரசுப் பள்ளி மாணவ மாணவிகளிடம் உள்ள விளையாட்டுத் திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் 2023-24-ஆம் கல்வியாண்டில் வட்டார மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல, 14 வயதுக்குள்பட்ட மற்றும் 14 முதல் 19 வயதுக்குள் பட்ட மாணவர்களுக்கு சதுரங்கம், உடல்திறன் தேர்வு, தடகளம், குத் துச்சண்டை, ஜிம்னாஸ்டிக், வளையப்பந்து, வாள்சண்டை, ஜூடோ, நீச்சல், சிலம்பம் மற்றும் கேரம் போட்டிகளை நடத்துவது தொடர் பான வழிகாட்டுதல்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வட்டார அளவிலான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.அதைத் தொடர்ந்து மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டி களை செப்டம்பர் முதல் அடுத்தாண்டு பிப்ரவரி வரை நடத்துவதற்கான விவரங்கள் தெளிவாக அட்டவணையில் இடம்பெற்றுள்ளன.
அதனடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்