Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET LATEST NEWS: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி: 11 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்கள்

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி. அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:





தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை எப்போது நிரப்பப்படும் என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார.


தமிழ்நாட்டில்- 2023-2024 கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு Teacher Recruitment Board -யிடம் கொடுக்கப்பட்ட காலண்டர் அடிப்படையில் வருடத்திற்கு 10 ஆயிரம் முதல் 11 ஆயிரம் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


மேலும் இந்த காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு ,இரண்டு மாதங்களில் தேர்வு நடத்தப்பட்டு, சான்றிதழ் சரி பார்ப்பு முடிவதற்குள் யாராவது  கேள்வி சரியில்லை, சரியான விடையில்லை என வழக்கு தொடர்ந்து விடுகின்றன. இதனால் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத நிலை ஏற்படுகிறது என்றும், எனினும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதனை கருத்தில் கொண்டு தற்போது தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்களை வைத்து  வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் விரைவில் நடவடிக்கையில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments