13.05.2023 மற்றும் 14.05.2023 நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த நூலக பணிகள் / சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு (கொள்குறி வகை) நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)-CLICK HERE
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - I (தொகுதி - I) முதன்மைத் தேர்விற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் மூலச் சான்றிதழ்களை அரசு இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்தல் தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-1 2020 (தொகுதி-1 Group-I Services) இல் அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 08.05.2023 முதல் 16.05.2023 (அரசு வேலை நாட்களில்) மாலை 5.45 மணிக்கு முன்னர் தங்களது மூலச் சான்றிதழ்களை (Original Certificates) ஸ்கேன் (Scan) செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் முதனிலை எழுத்துத் தேர்விற்கு தேர்வு கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.200/- (ரூபாய் இருநூறு மட்டும்) செலுத்த வேண்டும். அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசம் சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே முடிவடைவதால் விண்ணப்பதாரர்கள் 15.05.2023 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ செலுத்த வேண்டும்.
தவறும் பட்சத்தில், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய பின்னரே அவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விண்ணப்பதாரர்கள், சான்றிதழ்களை மேற்குறிப்பிட்ட நாளுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவ்விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வில் (Main Written Examination) கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதி அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்