Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN CM :தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உங்களில் ஒருவன் கேள்வி பதில் - FULL DETAILS

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உங்களில் ஒருவன் கேள்வி பதில்- முழு விவரங்கள்:


 வணக்கம்!

சட்டமன்றக் கூட்டத்தொடர் - கள ஆய்வு என்று ஒரு மாதத்திற்கும் மேல் உங்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்கின்ற இந்த 'உங்களில் ஒருவன்' நிகழ்ச்சிக்கு ஒரு சிறிய இடைவெளி விழுந்துவிட்டது!

இடைவெளி என்பது நிகழ்ச்சிக்குத் தானே தவிர, உங்களுக்கும் எனக்கும் இல்லையே! அதனால்தான் கொஞ்சம் நேரம் கிடைத்தவுடனேயே உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வந்துவிட்டேன்

கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு முன்னால்முதலில் என்னுடைய நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். எதற்கா?

நம்முடைய திராவிட மாடல் அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டு ஆக

போகிறது. அதற்குத்தான்!

இந்த இரண்டு ஆண்டுகளில்,

 மகளிருக்கு இலவசப் பேருந்து,

பள்ளிக் குழந்தைகளுக்குக் காலைச் சிற்றுண்டித் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளின் உயர்கல்விக்கு மாதம்தோறும்

ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம்,

தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் நான் முதல்வன் திட்டம் - என, இவ்வாறு எண்ணற்ற முன்னோடி மக்கள் நலத் திட்டங்களைச் செய்து காட்டியிருக்கிறோம். இந்த வேகம் கொஞ்சமும் குறையாமல், இன்னும் வேகத்துடன் இதுபோன்ற

திட்டங்கள் தொடரும். நம்பர் 1 தமிழ்நாடு என்ற நம்முடைய இலக்கை நோக்கி செல்வோம்!

Post a Comment

0 Comments