Tamil Nadu Higher Education Minister பொன்முடி அவர்கள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் ( Teacher Eligibility Test)தேர்ச்சிபெற்றவர்களுக்கு அரசு ஆசிரியர் பணி வழங்க வேண்டும்.
TEACHER ELIGIBILITY TEST- ல் தேர்ச்சி பெற்றாலும் பணிநியமனம் பெறபோட்டித்தேர்வில் தேர்ச்சிபெறவேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
ஆசிரியர் நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை 57-ஆக உயர்த்த வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி Teacher Eligibility Test -ல் தேர்ச்சி பெற்ற நலச்சங்கம் சார்பில் சென்னை DPI கடந்த மே 9 முதல் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தப் போராட்டத்துக்கு பாமக, நாம் தமிழர், BJP, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் நேரில் வந்து ஆதரவைத் தெரிவித்த இந்த நிலையில் போராட்டம் நடைபெற்ற DPI வளாகத்துக்கு சனிக்கிழமை நேரில் வந்த அமைச்சர் பொன்முடி ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தைகள் Teacher Eligibility Test- ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கோரிக்கைகள் Tamilnadu chief minister கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என உறுதியளித்தார். இதையடுத்து ஆசிரியர்களின் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்