Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

18 வயது நிரம்பிய தகுதி உள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் கீழ்க்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கலாம்!




வாக்காளர் பட்டியலினை தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in/ என்ற வலைதளத்திலும் காணலாம்.

அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டிலுள்ளது. 01.04.2023 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், கீழ்க்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கலாம்:-

i. வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்துவிண்ணப்பிக்கலாம். 

ii. இணையம் மூலமாக https://voters.eci.gov.in/

Iii வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

 iv. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து "Voter Helpline App" செயலியைத் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு சுருக்கமுறைத் திருத்த காலம் மற்றும் தொடர் திருத்த காலங்களில் பெறப்பட்ட முன்கூட்டிய விண்ணப்பங்கள் தொடர் திருத்த காலத்தின் போது அந்தந்த காலாண்டில் உரிய வாக்காளர் பதிவு அலுவலரால் பரிசீலிக்கப்படும்.


Post a Comment

0 Comments