Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC TODAY UPDATE - 10,12-ம் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து இவர்களுக்கு விலக்கு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண். 37/2022, நாள் 14.12.2022 மாவட்ட கல்வி அலுவலர் (தொகுதி - IC பணிகள்) பதவிக்கான முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination) கணினி வழித்தேர்வாக (Computer Based Test) 20.04.2023 அன்று 9.30 மு.ப முதல் 12.30 பி.ப வரை நடைபெறவுள்ளது. 


இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள், SSLC தேர்வுப்பணி மற்றும் HSC விடைத்தாள் திருத்தும் பணிக்கு நியமிக்கப்பட்டிருப்பின், அவர்கள் தங்களுக்குரிய முதன்மை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலரிடம் மேற்படி போட்டித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ததற்கான உரிய ஆவணங்களை காண்பித்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து விலக்கு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments