Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN Government jobs - தமிழக அரசு வேலை-அலுவலக உதவியாளர்- 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், சென்னை (தெற்கு) ஆணையத்தலைவர் அவர்களது அதிகாரத்திற்கு உட்பட்டுள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், சென்னை(தெற்கு) ஆணையத்தில் காலியாக உள்ள 1 அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தகுதிவாய்ந்த நபர்கள் தேர்வு செய்யும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன.



வேலையின் பெயர் :அலுவலக உதவியாளர்

மொத்த காலியிடங்கள்:01

குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பது இதன்மூலம் தெரியப்படுத்தப்படுகிறது. 

மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யவோ ஆணையத்தின் தலைவர் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. 

மேற்படி நேர்காணலுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.

அலுவலக உதவியாளர் பணிக்கான கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு

1. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

2.1.7.2023 அன்று வயது வரம்பு (அரசு விதியின்படி)


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 08.05.2023 மாலை 5 மணிக்குள்

முக்கிய குறிப்பு:விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, வயது, முகவரி மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகியவற்றிற்கான ஆவணங்களின் நகல்கள் சான்றொப்பம் செய்து அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்படவேண்டும்.


விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்

1. விண்ணப்பங்கள் அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்ய்பபட்டு, பதிவு தபால் மூலமாக மட்டுமே அனுப்பப்படவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்;

2. புகைப்படத்தை விண்ணப்பத்தில் அதற்கென குறிப்பிட்டுள்ள இடத்தில் ஒட்ட வேண்டும். புகைப்படத்தின் மேல்புறம் சுய சான்றொப்பமிட வேண்டும். புகைப்படத்தை விண்ணப்பத்தில் பின் (Stapler Pin ) அடித்து இணைக்கக்கூடாது. 

3.உரியமுறையில் சுய சான்றொப்பமிட்ட தேவையான சான்றாவனங்களின் நகல்களை  மட்டுமே விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்படவேண்டும். எக்காரணம் கொண்டும் அசல் சான்றாவணங்கள் இணைக்கப்படக்கூடாது.

4. முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுயவிலாசமிட்ட ரூ.35/-க்கான அஞ்சல் வில்லைகள் ஒட்டப்பபட்ட உறையுடன் இவ்வலுவலகத்திற்கு பதிவுத்தபால் மூலமாக 8.5.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் கிடைக்கத்தக்க அளவில் கீழே கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 8.5.2023 அன்று மாலை 5.00 மணிக்குமேல் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.நேர்காணல் மூலமாக மேற்கண்ட காலியிடம் நிரப்பப்படும்.

5. பூர்த்தி செய்ய்பப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி

தலைவர்.
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்.
தேர்வாணையச்சாலை, வ.உ.சி. நகர், பூங்கா நகரம்.
சென்னை (தெற்கு). 
சென்னை 600003.

6.முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தவறான தகவல்கள் கொண்டுள்ள விண்ணப்பங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படும்.

7. விண்ணப்பதாரர்களின் அடையாள மற்றும் இருப்பிட சான்றுக்காக கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டும். (ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை) நேர்முகத்தேர்வு குறித்த தகவல் தபால் மற்றும் அலைபேசி எண் (அ) மின்னஞ்சல்(e-mail id) (அ) புலனம் எண் (whatsapp) மூலம் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


NOTIFICATION AND APPLICATION -CLICK HERE

Post a Comment

0 Comments