Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தனியார் பள்ளிகள்- RTE மூலமாக விண்ணப்பிக்கலாம் -2023

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் (Right to Education (RTE)  படி 25 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு வருகின்ற ஏப்ரல் 20-ம் தேதி முதல் தொடங்குகிறது.



Right to Education (RTE) ACT  சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25% ஏழை எளிய மாணவர்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலமாக மாணவர்கள் LKG அல்லது 1-ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் இன்றி இலவசமாக படிக்கலாம்.

 RTE மூலமாக மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்க்க https://tnschools.gov.in/rte/?lang=en என்ற இணையதளம் மூலமாக ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.


Right to Education (RTE) - விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள்:

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

Right to Education (RTE)- தேவையான ஆவணங்கள்

1. வருமானச் சான்றிதழ் (நலிவடைந்த பிரிவினர்)
2. ஜாதி சான்றிதழ் (வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர்)
3. பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆதார் அல்லது குடும்ப அட்டை
4. மாணவரின் பிறப்புச் சான்றிதழ்
5. மாணவரின் புகைப்படம்
6. இருப்பிடச் சான்று
7. மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்குரிய சான்றிதழ்
8. மாணவரின் ஆதார் அட்டை

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேர விரும்பும் மாணவர்களளின் பெற்றோர்கள் தங்கள் இல்லத்திலிருந்து 1 கிலோமீட்டர் முதல் 3 கிலோமீட்டர் வரை உள்ள பள்ளிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

Post a Comment

0 Comments