Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Police Constable recruitmet -Free Coaching class - சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தும் காவலர் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு 2600க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது. 


இத்தேர்விற்கான கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். 

இத்தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். 

இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் கூடுதல் தன்னார்வ பயிலும் வட்டம் அமைந்துள்ள உடுமலைப்பேட்டை, எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 04.05.2023 அன்று மாலை 2.00 மணிக்கு தொடங்கப்படவுள்ளது.

மேலும், இப்பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 2.00 மணி முதல் 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.

 இத்தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் இவ்விலவசப் பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் பெயரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு இன்று முதல் பதிவு செய்து கொள்ளலாம். 

மேலும், இப்பயிற்சி வகுப்பில் மாதிரித் தேர்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. 

Post a Comment

0 Comments