Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர் கூட்டணி வெளியிட்டுள்ள செய்தி



தொடக்கக் கல்வி - 2022-3ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - செயல்முறை ஆணை வெளியீடு ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகள்


பார்வையில் காணும் செயல்முறை ஆணையின்படி பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கான 2022-23ஆம் ஆண்டிற்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வினை கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளம் வாயிலாக நடத்திட வழிகாட்டுதல்கள் மற்றும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பார்வையில் கண்ட செல்முறைகள் தொடர்பாக ஆசிரியர்களின் நலன் சார்ந்த கீழ்க்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் தங்களின் மேலான கவனத்திற்குக் கனிவுடன் சமர்ப்பிக்கின்றோம்.

கோரிக்கைகள்:

1. பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான கலந்தாய்வு அறிவிக்கப் படவில்லை எனத் தெரிகிறது, அதே நேரத்தில் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப் பட்டுள்ளது. இதில் ஒன்றியத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு நடத்துவதில் எவ்விதப் பிரச்சனையும் இல்லை ஆனால், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடத்தினால் அந்தந்த ஒன்றியத்தில் பல ஆண்டுகாலம் பதவி உயர்வுக்குத் தகுதிபெற்று பதவி உயர்வை எதிர் நோக்கிக் காத்திருப்பவர்களுக்குபதவி உயர்வுக்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும். பிற ஒன்றியங்களிலிருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் மாறுதல் மூலம் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் பணியில் சேரும் நிலை உருவாகும்.


 எனவே, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதி பெற்றுள்ள ஆரம்பப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் நலன் கருதி ஒன்றியம் விட்டு ஒன்றியம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வை நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டுமாய்த் தங்களைக் கனிவுடன் வேண்டுகிறோம்.



Post a Comment

0 Comments