Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு வேலை -மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலை!




தஞ்சாவூர் மாவட்டத்தில் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு: 

விண்ணப்பத்தாரர்களுக்கான அறிவுரைகள்

1 வயது: 01.07.2023 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அரசாணை (நிலை) எண் 91 மனிதவள மேலாண்மைத் (எஸ்) துறை நாள் 13.09.2021-ன் படி வயது உச்ச வரம்பு 30 ஆண்டுகளிலிருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. பொது பிரிவினருக்கு 32 வயது மிகாமலும் பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 34 வயதுக்கு மிகாமலும் அருந்ததியர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

2.விண்ணப்பங்கள் அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு, பதிவு தபால் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 

3.புகைப்படத்தை விண்ணப்பத்தில் அதற்கென குறிப்பிட்டுள்ள இடத்தில் ஒட்ட வேண்டும்.புகைப்படத்தின் மேல்புறம் கய சான்றொப்பமிட வேண்டும். புகைப்படத்தை விண்ணப்பத்தில் பின் அடித்து இணைக்கக்கூடாது.

4.உரிய முறையில் சுய சான்றொப்பமிட தேவையான சான்றாவனங்களின் நகல்களை மட்டுமே விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அசல் சான்றாவணங்கள் இணைக்கப்படக்கூடாது.

5.முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுயவிலாசமிட்ட ரூ.50/- க்கான அஞ்சல் வில்லைகள் ஒட்டப்பட்ட உறையுடன் இவ்வலுவலகத்திற்கு பதிவுத் தபால் மூலயாக 28.04.2023 மாலை 5.45 மணிக்குள் கிடைக்கத்தக்க அளவில் கீழே கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

28.04.2023 அன்று மாலை 5.45 மணிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது, தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். நேர்காளால் மூலமாக மேற்கண்ட காலியிடம் நிரப்பப்படும்.

Post a Comment

0 Comments