RTE ADMISSION DETAILS:
மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் கால அவகாசம் : 20.04.2023 முதல் 18.05.2023 வரை.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி : CLICK HERE
விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனில் அதற்கான விபரங்கள் எப்போது வெளியிடப்படும்:
விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் சார்ந்த விவரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும், சம்மந்தப்பட்ட பள்ளித் தகவல் பலகையிலும் 21.05.2023 அன்று மாலை 5.00 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
இலவச கல்வி திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் குழந்தைகளின் வயது பற்றிய முழு விவரங்கள்:
இத்திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2019 முதல் 31.07.2020 க்குள்ளாகவும், ஒன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2017 முதல் 31.07.2018க்குள்ளாகவும் பிறந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
Right to Education (RTE) - என்னென்ன சான்றிதழ்கள் தேவை:
1. பிறப்புச்சான்றிதழ்.
2. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க சாதிச் சான்றிதழ்.
3. வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ்.
4. நலிவடைந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 இலட்சத்திற்கும் கீழ் உள்ள வருமானச் சான்றிதழ்.
5.இருப்பிடச்சான்று.
RTE - ல் விண்ணப்பிக்க பெற்றோர்கள் Website மூலமாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கட்டணம் இன்றி விண்ணப்பிக்க:
மேலும் முதன்மை கல்வி அலுவலர் /மாவட்ட கல்வி அலுவலர/ வட்டார கல்வி அலுவலர்/ ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய அலுவலங்களில் கட்டணம் இன்றி விண்ணப்பிக்க தக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
குலுக்கல் முறை நடத்தப்படும் தேதி: 23.05.2023
தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பட்டியல் வெளியிடப்படும் தேதி : 24.05.2023
தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியல் இணையதளத்திலும் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள் 29.05.2023 தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்