Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN JOBS: தமிழக அரசு வேலை - 8 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!




மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், மாவட்ட அலுவலகங்களில் அரசுத்தலைப்பில் உள்ள 13 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலி பணியிடங்கள்:13

வேலையின் பெயர்: அலுவலக உதவியாளர்

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சம்பளம் விபரங்கள்: 15,700- 50,000 ரூபாய்

நிபந்தனைகள்:

1. விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதிக்கு ஆதராமாக பள்ளி மாற்றுச்சான்று / மதிப்பெண் பட்டியல் நகல் சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். 

2. இருப்பிடம், சாதிச் சான்று, முன்னுரிமை சான்று ஆகிய சான்றுகள் உரிய தகுதி வாய்ந்த அலுவலரிடம் பெறப்பட்டு அதன் நகலினை சான்றொப்பத்துடன் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வோர்டும்.

3. அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி மற்றும் முன்னுரிமை முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். 

4. விண்ணப்பத்துடன் ரூ.30-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட ஒரு அஞ்சல் உறையினை (10*4 inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும். 

5. வயது, கல்வித் தகுதி. இனசுழற்சி மற்றும் முன்னுரிமையற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படமாட்டார்கள்.

தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படும் நபர்களுக்கு அரசாணை எண்,303, நிதி (ஊதியக்குழு துறை நாள்:01.10.2017, அரசாணை எண்.305, நிதி(ஊதியக்குழு) துறை நாள்:13.10.2017 மற்றும் அரசாணை எண்.306, நிதி (ஊதியக்குழு) துறை நாள்:03.10.2017-ன்படி ஊதியம் ஒழுங்குபடுத்தப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 12.05.2023 பிற்பகல் 5.45 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ கிடைக்கப்பெறும் வகையில் வேண்டும். குறிப்பிட்ட காலநேர வரம்பினை கடந்து காலதாமதாக பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிப்பிரிவு), ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் தளம், மயிலாடுதுறை - 609001


Post a Comment

0 Comments