Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

108 ஆம்புலன்ஸ் சேவை பணிக்கு ஆட்கள் தேர்வு




திருவண்ணாமலை Government Medical College Hospital-ல் வரும் 22ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 108 AMBULANCE சேவைக்கான மருத்துவ உதவியாளர்கள் மற்றும் DRIVER பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் நடை பெற உள்ளது. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

வேலையின் பெயர்: மருத்துவ உதவியாளர் ,டிரைவர்


டிரைவர் வேலைக்கான கல்வி தகுதிகள் மற்றும் பிற தகுதிகள்:

டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

24 வயது முதல் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம்.

 162.5 செ.மீட்டர் உயரத் துக்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3ஆண்டுகள் மற்றும் batch வாகன உரிமம் எடுத்து ஒரு ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ உதவியாளர் வேலைக்கு என்னென்ன தகுதிகள்:


அதேபோல் மருத்துவ உதவியாளர் பணிக்கு B.SC NURSING, டிஜிஎன்எம் அல்லது எஎன்எம், டிஎம்எல்டி, B.SC ZOOLOGY, BOTANY,MICRO BIOLOGY,BIO CHEMISTRY , உயிரி தொழில்நுட்பவியல் கல்வித்தகுதியுடைய 19 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வித்தகுதிக்கான சான்றிதழ்கள், டிரைவர் உரிமம், அனுபவம் தொடர் பான அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments