Education news:
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் அனைத்து வகை ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான நடுநிலைப்பள்ளி/தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை (Panel List) 01.01.2023 அன்றைய நிலவரப்படி பார்வையில் தெரிவித்துள்ள விதிகள், சட்டம், அரசாணை மற்றும் கீழ்க்கண்ட விவரங்களின்படி தயார் செய்திடஅனைத்து மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர்களுக்கும்1. அவ்வாறு பதவி உயர்வுக்குத் தகுதியான ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியலை கீழ்க்கண்டவாறு எளிய முறையில், குறியீடு செய்து தயாரிக்க அறிவுறுத்தப்படுகிறது.
2.நடுநிலைப்பள்ளி/ தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்ந்தோர் பட்டியல் வட்டாரக் கல்வி அலுவலரால் தயாரிக்கப்பட்டு அந்தந்த கல்வி மாவட்ட அளவில் இரண்டு ஒன்றியங்களுக்கு ஒரு வட்டாரக் கல்வி அலுவலர், ஒரு கண்காணிப்பாளர் மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோர் கொண்ட குழு அமைத்து கல்வி மாவட்டத் தலைமை இடத்தில் முகாம் அமைத்து சரிபார்த்து மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) கல்வி அலுவலரால் ஒப்பளிக்க வேண்டும். ஒப்பளிக்கப்பட்ட தேர்ந்தோர் பட்டியலை சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட வேண்டும். வேறு ஒரு நகலில் பட்டியலில் உள்ள அனைத்து ஆசிரியர்களிடமும் ஒப்புகை பெற வேண்டும்.
3. ஆட்சேபணை விண்ணப்பங்கள் ஏதும் பெறப்பட்டால் அதன் மீது வட்டாரக் கல்வி அலுவலர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு விதிகளுக்குட்பட்டு திருத்தம் இருந்தால் தேர்ந்தோர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலக் கெடுவிற்குப் பின்னர் பெறப்படும் மேல்முறையீடுகள் பரிசீலிக்கப்படக்கூடாது. இறுதி செய்யப்பட்ட தேர்ந்தோர் பட்டியலை மாவட்டக் கல்வி அலுவலர் ஒப்புதல் செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேற்காண் பணிகளை 15 தினங்களுக்குள் முடித்திட வேண்டும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்