Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணைப்படி 27.03.2023
முதல் 31.03.2023 வரை மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து சலுகை அடையான அட்டை 27.03.2023 முதல் 31.03.2023 வரை அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரடியாக புதுப்பித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன். இ.ஆ.ப.அவர்கள் தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான இலவசப்பேருந்து சலுகை அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு 2023-2024 ம் நிதியாண்டான 01.04.2023 முதல் 31.03.2024 வரை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 27.03.2023 முதல் 31.03.2023 வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் விட் தலைமை அலுவலகம் (ரங்காபுரம்/ திருப்பத்தூர்) அரசு பேருந்து துறை அலுவலர்கள் வருகை புரிந்து இலவச பேருந்து சலுகை அடையாள அட்டை உடனடியாக வழங்கப்பட உள்ளதால், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Post a Comment

0 Comments