Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு வேலை -பல்நோக்கு உதவியாளர்

அரியலூர் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க சமூக நலத்துறையின் கீழ் "சகி"- ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) செயல்படுகின்றது. 


அதில் பணிபுரிய கீழ்கண்ட நிலைகளில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 

அரியலூர் மாவட்டத்தில் கீழ்கண்ட அலுவலகத்தில் தங்கள் சுயவிவரங்களுடன்24.03.2023 மாலை 5.45-ற்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. 

1. பதவி -பல்நோக்கு உதவியாளர்( Multipurpose Helper)

பணியிடம் -2

கல்வித்தகுதி - 8 வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி/ தோல்வி

வயது வரம்பு :21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி -நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராகவும்/சமையல் தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் வேண்டும்.

24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும். உள்ளூரை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.  பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். தொகுப்பு ஊதியம்ரூ.6,400/-

3. பதவி - பாதுகாவலர்( (Security Guard )
பணியிடம் -1

கல்வித்தகுதி - 8 வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி/ தோல்வி

வயது வரம்பு -21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி -நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும்.
உள்ளூரை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

Post a Comment

0 Comments