தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், அரசு தலைப்பில் காலியாக உள்ள 3 (மூன்று) ஈப்பு ஓட்டுநர் மற்றும் 10 (பத்து) அலுவலக உதவியாளர்
பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி மற்றும் இதர தகுதிகள்
1. ஈப்பு ஓட்டுநர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டம்1988 (மத்திய அரசு சட்டம் 59/1988)-ன் கிழான தகுதியுடைய அதிகாரியால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
2. அலுவலக உதவியாளர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
நிபந்தனைகள்
1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று, மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்பவேண்டும்.
2. இனசுழற்சி வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
3. அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
4. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
5. விண்னாப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
6. சுய முகவரியுடன் கூடிய ரூ.25/-அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை 1( 10*4 inches postal cover ) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
7. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விபரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
8. நேர்கானால் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.
9. விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு என பரிசீலனையில் கண்டறியப்பட்டால் அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.
10.நியமனத்தை ரத்து செய்வதற்கான அனைத்து அதிகாரமும் மாவட்ட ஆட்சியருக்கு உண்டு.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 10.04.2023 பிற்பகல் 5.45 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்