அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: முதன்மை தேர்வாளர் கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் மதிப்பீடு செய்த விடைத்தாள்களில் மதிப் பெண்களில் அதிகளவில் வேறுபடுகள், மறுகூட்டல், மறுமதிப்பீடுகளின் போது கண்டறியப்பட்டு தேர்வர்கள் நீதிமன்றத்தில்வழக்கு தொடுக்கும் நிகழ்வுகள் ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்கும் வகையில், மதிப்பீடு செய்யும் போது மிகவும் கவனமுடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. மாணவர் விடைத்தாளில் நடுவில் இரு பக்கங்களில் எழு தாமல் விட்டு அடுத்து வரும் தாளில் எழுதியிருந்தால் அதனை மதிப்பீடு செய்யாததும் நடக்கிறது. இதன் மூலம் முதன்மை தேர்வாளர்கள் கூர்ந்தாய்வு அலுவலர் பணியினை சரிவர கவனிக்கவில்லை என்பது தெரியவருகிறது.
உதவித் தேர்வாளர்களால் விடைக் எடுக்கப்படும். குறிப்பின்படி மதிப்பீடு செய்து உரிய மதிப்பெண் வழங்கப்பட்ட பின்னர், முதன்மை கண்காணிப்பாளர், கூர்ந் தாய்வு அலுவலர் மீண்டும் சரிபார்க்கும் போது கவனக்குறைவால் அதிகபட்ச மதிப்பெண்களைவிட கூடுதலாக வழங்கியது குறித்து தகவல் அறி யும் உரிமை சட்டத்தின்கீழ் புகார் பெறப்பட்டது. இதனால் தேர்வுதுறைக்கு அவப்பெயர் ஏற்படும் நிலையும் ஏற்பட்டது இது போன்ற நிகழ்வை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
கைப்பேசி பயன்பாடு கூடாது: மதிப்பீட்டு பணியின்போது தேவையில்லாமல் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல, கைப்பேசியை விடைத்தாள் திருத்தும் அறையில் எக்காரணத்தை கொண்டும் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
மதிப்பீடு செய்ததில் அதிக வேறுபாடுகள் கண்டறியப்பட்டால், சம் பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவான கூட்டல் பிழை இருந்தால், கூர்ந்தாய்வு அலுவலர் முழு பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்