Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு- எந்த மாவட்டம்?- முழு விவரங்கள்




புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை தாலுகா, புதுக்கோட்டை நகரைச் சேர்ந்த திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழா 13.03.2023 அன்று நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை எனவும், அதற்கு பதிலாக 01.04.2023 சனிக்கிழமை அன்று பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாகக் கொண்ட அலுவலகங்களுக்கு 02.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பணிநாள் எனவும் அறிவிக்கிறேன்.

இந்த உள்ளுர் விடுமுறை 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழான விடுமுறை நாள் அல்ல எனவும். இந்த உள்ளுர் விடுமுறை நாளான்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டு திறந்திருக்கும் எனவும் அறிவிக்கிறேன். மேலும், அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் எனவும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments