Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை புதுப்பிப்பதற்கான முகாம் – 30.03.2023 & 31.03.2023

திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டைகளை புதுப்பித்து வழங்கிடவும் மற்றும் புதிய அட்டை வழங்கிடவும் போக்குவரத்து கழகத்துடன் இனைந்து வரும் 30.03.2023, மற்றும் 31-03-2022 ஆகிய இரண்டு தினங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளி பாளையங்கோட்டையில் வைத்து முகாம் நடைபெறுகிறது. 



இம்முகாமில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உரிய விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையான அட்டை நகல், ஆதார் அட்டை நகல், UDID அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3 மற்றும் கடந்த வருடத்தில் அரசு போக்குவரத்து கழகம் மூலம் வழங்கப்பட்ட இலவச பேருந்து அட்டையுடன் விண்ணப்பித்து பழைய அட்டையினை புதுப்பித்தும் மற்றும் புதிய இலவச பேருந்து பயண அட்டை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments