Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC, TET, TRB MATERIALS -ஆறாம் வகுப்பு பாடம் 4-தாவர உலகம்

TNPSC, TET, TRB MATERIALS
இன்றைய பதிவு
ஆறாம் வகுப்பு
பாடம் 4- தாவர உலகம்

உயிரியல் என்றால் என்ன?
உயிரியல் என்பது உயிரினங்களின் வாழ்க்கை முறை ,அமைப்பு மற்றும் செயல்களைப் பற்றி பயிலும் இயற்கை அறிவியல் உயிரியல் ஆகும்.


தாவரத்தின் அமைப்பு மற்றும் செயல்கள்

பூக்கும் தாவரங்கள் இரண்டு முக்கிய தொகுப்புகளை கொண்டுள்ளன.
வேர் தொகுப்பு 
தண்டு தொகுப்பு

வேர் தொகுப்பு:
வேர் என்பது ஒரு தாவரத்தின் முக்கிய அச்சின் கீழ் பகுதியாகவும். வேர்களில் கணுக்களும் கணுவிடை பகுதிகளும் கிடையாது. வேர் நுனியில் வேர்முடி உள்ளது. வேர்முனைக்கு சற்று மேற்பகுதியில் வேர் துவிகள் ஒரு கட்டுரையாக காணப்படுகின்றன.
வேர்கள் நேர் புவி நாட்டம் உடையவை.

தாவரங்களின் வேர்கள் 2 வகைப்படும்
ஆணிவேர் தொகுப்பு 
சல்லி வேர் தொகுப்பு

ஆணிவேர் தொகுப்பு என்பது விதையிலிருந்து முளைவேர் தொடர்ந்து வளர்ந்து ஆணிவேரை உண்டாக்குகின்றன. முளைவேர் தடித்த முதல் நிலை வேராக வளர்கிறது. இதிலிருந்து துணை வேர்களான  இரண்டாம் நிலை வேர்கள் தோன்றுகின்றன.
ஆணிவேர் தொகுப்பு பொதுவாக இருவித்திலை தாவரங்களில் காணப்படுகின்றன.
 எடுத்துக்காட்டாக: வேம்பு, மாமரம்

சல்லி வேர் தொகுப்பு
சல்லிவேர் தொகுப்பு என்பது பெரும்பாலும் ஒருவித்தலை தாவரங்களில் காணப்படுகின்றன. அதாவது முதல் நிலை வேர் சிறிது காலத்தில் அழிந்து தண்டின் அடிப்பகுதியில் சம பருமன் உள்ள வேர்கள் கொத்தாக தோன்றி வளர்கிறது.
எடுத்துக்காட்டு :புல், மக்காச்சோளம்

வேரின் வேலைகள்:
தாவரத்தை வேர்கள் பூமியில் நிலை நிறுத்தவும், மண்ணிலிருந்து தாவரங்களுக்கு தேவையான நீரையும் கனிம சத்துக்களையும் உறிஞ்சுவதற்கும், வேர்களில் தங்களின் உணவை சேமிக்கவும் உதவுகின்றன.

இஞ்சி என்பது தண்டா ?வேரா?
இஞ்சி பகுதி தண்டு பகுதி ஆகும்.

தண்டு தொகுப்பு
மண்ணிற்கு மேற்பகுதியில் உள்ள அனைத்தும் தண்டு தொகுப்பு என அழைக்கிறோம். இதனுடைய மைய அச்சு தண்டு ஆகும்.
தண்டு பகுதியில் கணுக்களும் கனுவிடை பகுதிகளும் உள்ளன.

கணு என்பது தண்டின் இலைகள் தோன்றும் பகுதி கணு எனப்படும்.

கணுவிடை பகுதி என்பது இரண்டு கணுக்களுக்கு இடையே உள்ள பகுதி ஆகும்.

இலைகோணம் என்பது இலையின் அடிப்பகுதிக்கும் தண்டிக்கும் இடையே உள்ள கோணம் இலைக்கோணம்.



தண்டின் வேலை:
கிளைகள் இலைகள் மலர்கள் மற்றும் கனிகளை தண்டுகள் தாங்குகின்றன.

வேரினால் உறிஞ்ச பட்ட நீர் மற்றும் கனிமங்கள் தண்டின் வழியாக தாவரத்தின் மற்ற பாகங்களுக்கு கடத்தப்படுகின்றன.

இலைகளில் தயாரிக்கப்படும் உணவு தண்டின் வழியாக தாவரத்தின் பிறப்பாக உங்களுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.

சில தாவரங்கள் உணவை தண்டுப் பகுதியில் சேமித்து வைக்கின்றன எடுத்துக்காட்டு: கரும்பு

இலை

தண்டின் கனவின் மேல் விரிந்த தட்டையான பசுமை நிறத்தில் தோன்றும் புற அமைப்பு இலையாகும்.

இலையில் உள்ள பகுதிகள் இலைக்காம்பு 
இலை பரப்பு
 மைய நரம்பு 
இலை அடி பகுதி 
இலை அடி செதில் 
பச்சையம் 
இலை துகள்கள்

இணைக்காம்பு என்பது தண்டு மற்றும் இலையை இணைக்கும் காம்பு பகுதி.

பசுமையான தட்டையான பகுதிக்கு இலைத்தாள் அல்லது இலை பரப்பு.

இலையினுடைய மையத்தில் உள்ள நரம்பிற்கு மைய நரம்பு.

தண்டு அல்லது கிளையுடன் இணைக்கப்பட்டுள்ள இலையின் பகுதி இலையடி பகுதி எனப்படும்.

ஒருசில இலைகளின்  அடிப்பகுதியில் இரண்டு சிறிய பக்கவாட்டு வளரிகள் உள்ளன. அவற்றிற்கு இலையடி செதில்கள் எனப்படும்.

இலைகள் பச்சை நிறத்தில் இருப்பதற்கான காரணம் அவற்றில் உள்ள பச்சை நிறமிகளான பச்சையமாகும்.

இலைகளின் அடிப்பகுதியில் உள்ள நுண்ணிய துளைகள் இலைத்துணைகள் எனப்படும்.

இலையின் வேலை:
ஒளிச்சேர்க்கை மூலம் உணவை தயாரிக்கவும், சுவாசித்தலுக்கும், இலை துளைகள் வழியே நீராவி போக்கு நடைபெறுகிறது.

விக்டோரியா அமேசோனிகா என்ற தாவரத்தின் இலை மூன்று மீட்டர் விட்டமும், நன்கு வளர்ச்சி அடைந்த இலையின் மேற்பரப்பு 45 கிலோ கிராம் எடை கொண்டது.

தாவரங்களை பூவின் அடிப்படையில் இரண்டு வகைகளாக பிரிக்கலாம் பூக்கும் தாவரங்கள் எடுத்துக்காட்டு சூரியகாந்தி மற்றும் பூவா தாவரங்கள் எடுத்துக்காட்டு ரிக்ஸியா

தாவரங்களை விதை அமைந்திருக்கும் அடிப்படையில் இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.

ஆஞ்சியோஸ்பெர்ம்கள்- (மூடிய விதை தாவரங்கள் -விதைகள் கனிகளில் புதைந்திருக்கும்) எடுத்துக்காட்டு மா
ஜிம்னோஸ்பெர்ம்கள்-(திறந்த விதை தாவரங்கள் -விதைகள் கனிகளில் புதைந்து இருக்காது) எடுத்துக்காட்டு சைகஸ்

வாழிடம் என்றால் என்ன?
ஒவ்வொரு உயிரினமும் உயிர் வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் அதற்கு ஒரு இடம் தேவை அந்த இடமே வாழிடம் ஆகும்.

வாழிடங்களின் இரண்டு முக்கிய வகைகள் 
நீர்வாழிடம்
நிலவாழிடம்

நீர்வரிடம் இரண்டு வகைப்படும் 
நன்னீர் வாழிடம் 
கடல் நீர் வாழிடம்

தாமரையின் இலைக்காம்பில் உள்ள காற்று இடைவெளிகள் அவை நீரில் மிதக்க உதவுகின்றன.

உலகில் மிக நீளமான நதி நைல் நதியாகவும் ,இது 6,650 கிலோ மீட்டர் நீளம் உடையது.

இந்தியாவின் மிக நீளமான நதி கங்கை ஆகும் இதன் நீளம் 2,525 கிலோமீட்டர்.


நில வாழிடங்கள் மூன்று வகைப்படும் காடுகள் 
புல்வெளிகள் 
பாலைவனங்கள்

470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான நிலவால் தாவரங்கள் மால்கள் மற்றும் லிவர்வோர்ட்ஸ்கள் ஆகும.

அமேசான் காடு எங்கு உள்ளது? தென் அமெரிக்கா


சவானா என்பது புல் வகையாகும்.

உலக வாழிட நாள்-ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை


கள்ளி செடிகளில் உள்ள முட்கள் எதனுடைய மாறுபாடு என்றால் இலையினுடைய மாறுபாடு.

தாவரங்களின் தகவமைப்புகளும் மாற்று உறுப்புகளும்

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை அல்லது வாழிடங்களில் வாழும் தாவரங்கள் அங்கு வாழ்வதற்கு ஏற்ற குறிப்பிட்ட தகவல் அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளுதல்.

பற்று கம்பி (ஏறுகோடிகள்)
இனிப்பு பட்டாணி(தந்திரம்)- சிற்றிலைகள் பட்டு கம்பிகளாக மாறி உள்ளன.


பாகற்காய்- கோண மொட்டு பற்று கம்பிகளாகம் மாற்றம் அடைந்துள்ளன.

கோண மொட்டு என்பது இலையின் கோணத்தில் தோன்றும் மொட்டு ஆகும்.

வளரும் பருவ நிலையில் அதி வேகமாக வளரக்கூடிய தாவரம் மூங்கில்.

காகித பூ ( போகெய்ன்வில்லா)

கள்ளி வகை தாவரங்கள் பச்சை நிறத்தை கொண்டு ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. இதாவரத்தின் எந்த பகுதியில் ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது?
தண்டு பகுதி

பின்னுக்கொடி மெலிந்த தன்னுடைய தாவரங்கள் நேராக நிற்க உதவுகிறது.










Post a Comment

0 Comments