Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

12th INTERNAL மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

மார்ச் / ஏப்ரல் 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கு, பள்ளியில் வழங்கப்பட்ட அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் குறித்தான சுற்றறிக்கை இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. அதனை, முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பி வைத்து, உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பார்வை 1 மற்றும் 2-ல் காணும் அரசாணைகளில் தெரிவித்துள்ளவாறு, 2022 2023 கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு பள்ளியில் வழங்கப்பட்ட அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யவேண்டும்.

1. அகமதிப்பீட்டிற்கான பாடக் குறியீடுகள்
மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களது அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கு ஏதுவாக, ஒவ்வொரு பாடத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாடக் குறியீடுகள் (+2 Subject codes for Internal marks) விவரம் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.

2. வெற்று மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்தல் பள்ளித் தலைமையாசிரியர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கையில் குறிப்பிட்டுள்ள நாட்களில் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திற்குச் (www.dge1.tn.gov.in) சென்று தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான பெயர்பட்டியலில் இடம் பெற்றுள்ள தங்களது பள்ளி மாணவர்களது அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.

3. வெற்று மதிப்பெண் பட்டியலை பூர்த்தி செய்து, அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல்

பார்வை 3-ல் காணும் செயல்முறைகளில் குறிப்பிட்டவாறு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கு தயாரிக்கப்பட்டுள்ள அகமதிப்பீடு மதிப்பெண்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட படிவத்தில் உள்ளவாறு, ஒவ்வொரு பாடத்திற்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களை, மேற்குறிப்பிட்டவாறு பதிவிறக்கம் செய்த மதிப்பெண் பட்டியலில் பதியவேண்டும். அதன் பின்னர், அம்மதிப்பெண்களை தலைமையாசிரியர் தங்களுக்கு வழங்கப்பட்ட USER ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி, பிற்சேர்க்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பெயர்பட்டியலில் இடம் பெற்றுள்ள தங்கள் பள்ளி மாணவர்கள் அனைவரது அக மதிப்பீட்டு மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை பள்ளி தலைமையாசிரியர் உறுதி செய்து கொள்ள வேண்டும். எந்த ஒரு மாணவரது மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்படாமல் இருத்தல் கூடாது.

பூர்த்தி செய்யப்பட்ட மதிப்பெண்கள் பட்டியல்களை, பாடவாரியாகவும், பதிவெண் வாரியாகவும் அடுக்கி, +2 தேர்வுக்கு தனித்தனி கட்டுகளாக கட்டி, அக்கட்டுக்களின்மீது கீழ்க்கண்ட விவரங்களை எழுத வேண்டும்.

Post a Comment

0 Comments