Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்படும் பயனாளிகளுக்கு மானியத் தொகை

திருநெல்வேலி மாவட்டத்தில் பாரத பிரதமரின் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்படும் பயனாளிகளுக்கு ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து மானியத் தொகையாக ரூ.1,20,000/-ம், தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கூரை அமைக்க ரூ.50,000/- மற்றும் மாநில அரசின் கூடுதல் நிதியாக ரூ.70,000/- ஆக மொத்தம் ரூ.2,40,000/- வழங்கப்படுகிறது.

இது தவிர மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 90 மனித சக்திகளுக்கான தொகை ரூ.25,290/-ம் கழிப்பறை அமைக்க மானியமாக ரூ.12,000/- வழங்கப்படுகிறது. ஒரு வீடு கட்டுவதற்கு ரூ.2,77,290/- (ரூபாய் இரண்டு இலட்சத்து எழுபத்தேழாயிரத்து இருநூற்று தொண்ணூறு மட்டும் ) பயனாளிக்கு வழங்கப்படுகிறது.

மேலும், வீடு கட்ட தேவையான சிமெண்ட் மூடைகளுக்கு ஒரு மூடை ரூ.216/- விலையிலும் மற்றும் 320 கி.கி. இரும்பு கம்பிகள் குறைந்த விலையிலும் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் வழங்கப்படுகிறது. 



மேலும், மகளிர் குழுவில் உள்ள பயனாளிகளுக்கு மகளிர் திட்டம் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் சமுதாய முதலீட்டு நிதியின் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.

Post a Comment

0 Comments