Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரசு வேலை-794- காலி பணியிடங்கள்- வாய்ப்பை நழுவி விடாதீர்கள்!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண் 05-ல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளில் காலியாக உள்ள 794 மேற்பார்வையாளர் (Overseer) மற்றும் இளநிலை வரைவு அலுவலர் (Junior Draughting Officer) பணிக்காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


 மேலும் விவரங்கள் அறிந்துகொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://www.tnpsc.gov.in/ இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இக்காலிப்பணியிடத்திற்கான

1. கல்வித்தகுதி கட்டிடக்கலை பட்டயப் படிப்பு (Diploma Civil) /கட்டிடக்கலை பட்டப் படிப்பு BE (Civil)

2. வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு -37, இதர வகுப்பினருக்கு(BC,MBC,SC and ST) வயது வரம்பு இல்லை

3. விண்ணப்பிக்க கடைசி தேதி 04.03.023 4. தேர்வு தேதி 27.05.2023

இப்போட்டித் தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வகுப்புகள் சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 20.02.2023 முதல் நடத்தப்படவுள்ளது.

இப்பணிக்காலியிடத்திற்கான தகுதியும் விருப்பமும் உள்ள மனுதாரர்கள் இப்போட்டித் தேர்விற்கு விண்ணப்பம் செய்யும்படியும், கட்டணமில்லா இப்பயிற்சிவகுப்பில் கலந்து கொள்ள சென்னை, தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை (தொடர்பு எண்: 9499966021) தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


Post a Comment

0 Comments